அடையாளமில்லார்க்கு...
வலதுசாரிப் பொருளாதார வளர்ச்சியா... வலதுசாரி கலாசார மீட்டெடுப்பா... எது இந்தியாவின் வழிகாட்டிக் கோட்பாடாக இருக்கவேண்டும்? வாஜ்பாய் தலைமையிலான பாஜக மட்டுமல்ல; நரேந்திர மோதி தலைமையிலான பாஜகவுமே தேசத்தின் பொருளாதார முன்னேற்றம்; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இவற்றுக்கே முக்கியத்துவம் தந்துவருகிறது. அத்வானி பிரதமரானால் இந்து கலாசார மீட்டெடுப்புக்கு முக்கியத்துவம் தருவார் என்று அவருக்கு பதிலாக வாஜ்பாய் பிரதமராக்கப்பட்டார். நரேந்திர மோதி அத்வானியைப் போலவே கலாசார விஷயங்களில் தீவிரமாகச் செயல்படுவார் என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், அவர் குஜராத்தில் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் நேர்த்தியான நிர்வாகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முழுக்கவும் வாஜ்பாய் பாணியிலான நல்லாட்சியையே வழங்கினார். பிரதமரான பின்னரும் உயர் தொகை மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என பொருளாதார சீர்திருத்த்த்துக்கே முக்கியத்துவம் தந்துவருகிறார். பொருளாதாரத்தில் வலுவாக இருந்தால்தான் கலாசார, மரபுகளைப் பாதுகாத்துப் பின்பற்றமுடியும் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு ச...